ஆப்நகரம்

முதலாமாண்டு, இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல் மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Sep 2020, 12:21 pm
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியும் கல்வி நிலையங்களை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதையொட்டி ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த ஆண்டிற்கான கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
Samayam Tamil Final Semester Exams


தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் கட்டாயம் நடத்தப்படும். அதுவும் வரும் 30ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை.

எனவே இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்-லைன் தேர்வு... பல்கலைக்கழகத்தின் அசத்தல் அறிவிப்பு!!

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும். இந்த தேர்வுகள் எழுதாமல் மாணவர்கள் பட்டம் பெற அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் யுஜிசி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் யுஜிசி தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி