ஆப்நகரம்

வேட்பாளரின் குடும்பத்தினரும் வருவாய் ஈட்டும் வழிகளை வெளியிட உத்தரவு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் தங்கள் வருமானக் கணக்கைக் காட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 17 Feb 2018, 9:53 am
டெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் தங்கள் வருமானக் கணக்கைக் காட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil sc says election candidates their spouses and dependents will have to declare source of income
வேட்பாளரின் குடும்பத்தினரும் வருவாய் ஈட்டும் வழிகளை வெளியிட உத்தரவு


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுத் தாக்கலின்போது தங்கள் சொத்துகள் மற்றும் மனைவி, பிள்ளைகளின் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. இதில், வேட்பாளரின் குடும்பத்தினருக்கு எதன் மூலம் வருவாய் கிடைக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டிய கட்டயாம் இல்லை. இதுவே தற்போது பின்பற்றப்படும் நடைமுறை.

இந்நிலையில் இதனை மாற்றி அமைக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. லக்னோவைச் சேர்ந்த ‘லோக் பிரகாரி’ (Lok Prahari) என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில், “வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அவர்கள் தங்களுக்கு வருவாய் கிடைப்பது எப்படி என்பதைக் குறிப்பிடவும் வேட்புமனுவில் இடம் அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனைவி அல்லது கணவர், பிள்ளைகள் மற்றும் தங்களை சார்ந்திருப்பவர்களின் சொத்து விவரங்களைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் எப்படி வருவாய் ஈட்டுகிறார்கள் என்று குறிப்பிடுவது கிடையாது.” என்றும் “26 மக்களவை உறுப்பினர்கள், 11 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 257 சட்டப்பேரவை உறுப்பினர்களின் சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்திருக்கிறதுது” என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. அப்போது, “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமின்றி அவரது மனைவி அல்லது கணவர், பிள்ளைகள் மற்றும் தங்களை சார்ந்திருப்பவர்கள் தங்கள் வருமானத்திற்கான மூலத்தை காட்ட வேண்டும்” நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி