ஆப்நகரம்

மாணவர்களுக்கு கொரோனா தொற்று: பள்ளிகளுக்கு விடுமுறை!

கொரோனா தொற்றால் பள்ளிகளுக்கு மூன்று வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Oct 2020, 12:45 pm
கொரோனா பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil students


மத்திய அரசு பள்ளிகள் திறப்புக்கான அனுமதியை வழங்கியுள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பெற்றோர்களின் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அக்டோபர் 15ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படுவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது: அரசு திட்டவட்டம்!

கொரோனா பரவல் வேகம் குறையாமல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் ‘வித்யகமா’ என்ற திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களுக்குச் சென்று கல்வி கற்றுத் தரப்படுகிறது. இந்நிலையில் அங்கு கல்வி பயின்ற 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக பள்ளிகளுக்கு மூன்று வாரங்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடியூரப்பா.

K. K. Shailaja: கைமீறிப் போன கொரோனா கணக்கு; என்ன செய்யப் போகிறது கேரளா?

இதுகுறித்து அவர், “மாநிலத்தில் பரவி வரும் கொரோனா தொற்றால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து ஊடகங்கள் மூலம் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இரு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு வரும் 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு முன் கூட்டிய தசரா வாழ்த்துக்கள்” என கூறினார்.

அடுத்த செய்தி