ஆப்நகரம்

பள்ளிகள் திறக்கப்படும் தேதி: உறுதியாக தெரிவித்த கல்வி அமைச்சர்!

கொரோனா தொற்றுக்கு இடையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Nov 2020, 11:34 am
மேகாலயா மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 11,454 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 10,451 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 110 பேர் பலியாகி இருக்கின்றனர். 893 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் கல்வியை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் கல்வி பெறும் வசதிகளைக் கொண்டுள்ளனர். மற்றவர்கள் வீட்டிலிருந்த படியே கல்வி கற்க இயலாத நிலை நீடிக்கிறது.
Samayam Tamil School Reopen in Meghalaya


இதுபற்றி அரசு ஆலோசனை நடத்தியது. அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து கிராமப்புறங்களில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் லாக்மென் ரைம்புய் தெரிவித்துள்ளார்.

வருகைப் பதிவேடு கட்டாயமில்லை. ஆனால் பெற்றோர்களின் சம்மதம் கட்டாயம் தேவை. நகர்ப்புறங்களில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் தொடங்கப்படும்.

மீண்டும் எகிறும் கொரோனா; அடுத்த ஆட்டத்திற்கு ரெடியாகும் வைரஸ்!

பள்ளிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். ரி-போய் மாவட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பள்ளிகள் திறக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதுப்பிக்கப்பட்ட கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி