ஆப்நகரம்

ஆண்களின் கைபடாத 400 ஆண்டுகள் சாமி சிலைகள் இன்று ஆண்களால் நகர்த்தப்படுகிறது!!

ஒடிசா மாநிலத்தில் ஆண்கள் வழிபாட்டிற்கு 400 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ள கோவிலின் சிலைகள் ஆண்களால் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Samayam Tamil 20 Apr 2018, 6:19 pm
ஒடிசா மாநிலத்தில் ஆண்கள் வழிபாட்டிற்கு 400 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ள கோவிலின் சிலைகள் ஆண்களால் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
Samayam Tamil sea_level_rise_forces_odisha_temple_to_lift_1524207974 (1)


ஒடிசா மாநிலத்தில் உள்ள மா பஞ்சுபராஹி என்ற கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோவிலில் ஆண்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் 5 சாமி சிலைகள் உள்ளன. இதுவரை ஒரு ஆண்கூட அந்த சிலைகளை தொட்டதில்லை என்று கூறப்படுகிறது. மேலும்இந்தக் கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு திருமணமான தலித் மீனவப்பெண் மட்டுமே பூஜை செய்ய முடியும்.


இந்தக் கோவிலானது கடலில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. மாறிவரும் இயற்கை சூழலால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் 400 வருடம் பழமை வாய்ந்த இந்தக் கோவில் நீரில் மூழ்கும் நிலையில் உள்ளது.

இவ்வளவு ஆண்டுகளாக ஆண்கள் தொடக் கூட முடியாத சிற்பங்கள் , வேறு வழியில்லாமல் தற்போது ஆண்களால் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் பெண் பூசாரி சபிதா தலேய் கூறுகையில், ''பெண்கள் இந்த சாமி சிலைகளை தூக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால்தான் ஆண்கள் இந்த செயலில் ஈடுபட வேண்டியது உள்ளது. சாமி சிலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் சிலைகள் அனைத்தும் மீண்டும் புனிதப்படுத்தப்படும்'' என்றார்.

சபரிமலை கோவிலில்வயதிற்கு வந்தபெண்கள் நுழைவது தீட்டு என்ற நம்பிக்கை இருப்பதுபோலவே இந்த கோவிலில் ஆண்கள் நுழைவது தீட்டாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி