ஆப்நகரம்

காஷ்மீரில் மீண்டும் பிரச்னை : 144 உத்தரவால் வெறிச்சோடிய நகரங்கள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பல நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Feb 2019, 5:34 pm
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பல நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kashmir


காஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சிக்கி 40க்கும் அதிகமான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் பல பகுதிகளில் துணை ராணுவப்படையினர் ரோந்து அதிகரித்துள்ளனர்.

144 தடை :
இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. வன்முறைய தடுக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதில் போலீஸாரின் வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. போலீஸார் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இப்படி நடப்பது முதன் முறை அல்ல என்றாலும், தற்போது பாதுகாப்பு பணிக்கான ரோந்து செல்வதில் தடை ஏற்படுத்தும் விதமாக இப்படி நடக்கிறது.

இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரின் பல முக்கிய நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால நகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.

அடுத்த செய்தி