ஆப்நகரம்

பெல்லட் குண்டுகளுக்கு பதில் பிளாஸ்டிக் குண்டுகள்: தொடர்ந்து அடி வாங்கும் காஷ்மீரிகள்

கலவரத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளுக்கு பதில் பிளாஸ்டிக் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

TNN 18 Apr 2017, 8:28 am
காஷ்மீர்: கலவரத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளுக்கு பதில் பிளாஸ்டிக் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
Samayam Tamil security forces to use plastic bullets for crowd control in jk pellet guns only as last resort
பெல்லட் குண்டுகளுக்கு பதில் பிளாஸ்டிக் குண்டுகள்: தொடர்ந்து அடி வாங்கும் காஷ்மீரிகள்


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி புர்ஹான் வானி உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஏற்பட்ட கலவரங்களால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தினர். அதன் காரணமாக ஏராளமானோருக்கு கண் பார்வை பறிபோனது. முகங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து பெல்லட் குண்டுகள் பயன்படுத்த தடை விதிக்குமாறு கோரிக்கைகள் எழத் தொடங்கின.

கலவரங்களை கட்டுப்படுத்தும் போது மட்டும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் தற்போது பெல்லட் குண்டுகள் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிளாஸ்டிக் குண்டுகள் பயன்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நீடிக்கும் கலவரங்களால், அதில் ஈடுபடுபவர்களை கலைக்க பாதுகாப்பு படை பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெறும் 7% வாக்குகள் மட்டுமே பதிவாகின.

Security forces to use plastic bullets for crowd control in J&K; pellet guns only as 'last resort'.

அடுத்த செய்தி