ஆப்நகரம்

இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி எப்போ வரும்? அதிகாரப்பூர்வ தகவல்!

இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Oct 2020, 10:29 am
கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பது உறுதியாகிவிட்டது. தடுப்பூசி உருவாக்க அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷ்யா என பல நாடுகள் மிகத் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இதில் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி முன்னணியில் இருக்கிறது.
Samayam Tamil serum institute chief adar poonawalla says 100 million covid 19 vaccine doses will be ready by mid 2021
இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி எப்போ வரும்? அதிகாரப்பூர்வ தகவல்!


ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி இந்தியாவில்

ஆகஸ்ஃபோர்ட் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் பணியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. முதல் தொகுதியாக 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் தயாராகிவிடும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் தடுப்பூசி

ஆதர் பூனாவாலா NDTV ஊடகத்திடம் பேசியபோது, “எமெர்ஜன்சி லைசன்ஸ் கிடைக்காவிட்டாலும் டிசம்பர் மாதத்தில் தடுப்பூசி சோதனை முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இங்கிலாந்திலும் தடுப்பூசி சோதனை இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. இதன்பின்னர் இந்தியாவில் ஜனவரி மாதம் தடுப்பூசியை அறிமுகப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

10 கோடி தடுப்பூசிகள்

மேலும் பேசிய ஆதர் பூனாவாலா, “அடுத்த ஆண்டின் இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டுக்குள் 10 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. இந்தியாவிலும், உலகளவிலும் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி பாதுகாப்பை பொறுத்தவரை பிரச்சினை இல்லை” என்று தெரிவித்தார்.

மற்ற தடுப்பூசிகளின் நிலவரம்

உலகளவில் 150க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக, ஆக்ஸ்ஃபோர்டு, மாடர்னா, பிஃபைசர், ஜான்சன் & ஜான்சன் ஆகியவை தயாரித்த தடுப்பூசிகள் முன்னணியில் இருக்கின்றன. இந்தியா சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் தடுப்பூசிக்கும் மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி