ஆப்நகரம்

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது சரிந்து விழுந்த கூரை; 20 பேர் காயம்!

மோடி பங்கேற்ற கூட்டத்தில், மேற்கூரை சரிந்ததில் பலர் படுகாயமடைந்தனர்.

Samayam Tamil 16 Jul 2018, 4:13 pm
மிட்னாபூர்: மோடி பங்கேற்ற கூட்டத்தில், மேற்கூரை சரிந்ததில் பலர் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil Midnapore Accident


மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த சூழலில் காலை முதல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது நுழைவு வாயிலின் ஒருபுறம் மேற்கூரை சரிந்து விழுந்தது.


மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், அப்பகுதியில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் பாஜகவினரின் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்துடன் வந்த ஆம்புலன்ஸும் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார். மிட்னாபூரில் காலையில் இருந்தே கனமழை பெய்து கொண்டிருந்தது. மேலும் மோடியை பார்ப்பதற்காக பந்தல் அமைக்கப்பட்ட கம்பங்களிலும் சிலர் ஏறியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Several injured after a portion of tent in PM Narendra Modi’s rally in Midnapore.

அடுத்த செய்தி