ஆப்நகரம்

பயங்கர விபத்தில் சிக்கிய பேருந்து - புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் படுகாயம்!

ஸ்ரீகாகுளம் அருகே புலம்பெயர் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்தில் சிக்கியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

Samayam Tamil 26 May 2020, 1:50 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஊரடங்கால் பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்றோர் கையில் காசின்றி தவித்து வருகின்றனர். இவர்களின் ஒரே நம்பிக்கை சொந்த ஊருக்கு திரும்புவதே ஆகும்.

இதையொட்டி நாடு முழுவதும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு தனியார் பேருந்து ஒன்றில் 40க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாச மண்டலம் மந்தன கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

நம்பிக்கையூட்டும் புள்ளிவிவரம்; வைரஸை விரட்ட போராடும் அதிகாரிகள் - எப்படி இருக்கிறது தாராவி?

இதனால் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த அவர்கள் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி