ஆப்நகரம்

அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி மீது சசி தரூர் மானநஷ்ட வழக்கு

காங்கிரஸ் எம்பி சசி தரூர், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

TNN 27 May 2017, 1:47 am
காங்கிரஸ் எம்பி சசி தரூர், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
Samayam Tamil shashi tharoor files defamation suit against arnab goswami and republic tv
அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி மீது சசி தரூர் மானநஷ்ட வழக்கு


கடந்த 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சுனந்தா தொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில், இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேசி சசி தரூரின் புகழுக்கும், பொது வாழ்க்கைக்கும் பங்கம் ஏற்படுத்தியதாக, புகார் கூறப்படுகிறது.

இதன்பேரில், சசி தரூரின் வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ரிபப்ளிக் டிவியில் சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் பற்றி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியதாகவும், அந்த நிகழ்ச்சி தனக்கு பொதுமக்கள் மத்தியில் இழுக்கு ஏற்படும்படி அமைந்ததாக, சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டெல்லி காவல்துறை சுனந்தா பற்றிய வழக்கின் விசாரணையை முடிக்கும் வரை இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தடை விதிக்கும்படியும் அவர் கோரியுள்ளார். மேலும், ரூ.2 கோடி நஷ்ட ஈடு வழங்கவும் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

சசி தரூர் குறிப்பிடுகையில் அர்னாப் இதற்கு முன் தலைமை ஆசிரியராக இருந்த சேனலில் இதே போன்ற ஒளிபரப்பை செய்த போது தேசிய ஒளிபரப்பு தரக்கட்டுப்பாடு ஆணையத்தால் தடுக்கப்பட்டார். டெல்லி காவல்துறையினர் தங்களது விசாரணையில் எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தேகப்பட்டு கேள்வி கேட்கவில்லை எனவும் கூறினார்.

சுனந்தா புஷ்கர் 2014 ஜனவரி 17 ஆம் தேதி தெற்கு டெல்லி நட்சத்திர விடுதி அறை ஒன்றில் இறந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.

Congress MP Shashi Tharoor today filed a civil defamation suit against Arnab Goswami and his newly-launched news channel Republic TV in the Delhi High Court claiming damages and compensation of Rs 2 crore.

அடுத்த செய்தி