ஆப்நகரம்

மலைப்பாம்பை மீட்டு மேலே வந்த நபருக்கு திடீரென ஏற்பட்ட விபரீதம்...

கேரளாவில் கிணற்றுக்குள் விழுந்த மலை பாம்பை மீட்ட வனத்துறையினர் கயிறு அறுந்து கீழே விழும் வீடியோ காட்சி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Samayam Tamil 12 Dec 2019, 8:35 pm
கேரளாவில் பாம்புகள் அதிகம் சுற்றி திரிவது சாதாரணமான விஷயம்தான். ஆனால் தமிழகத்தை போல கிடையாது அங்கு கதையே வேறு. பாம்புகளின் அரசனாக கருதப்படும் ராஜ நாகங்கள் கூட அங்குள்ள வசிப்பிடங்களில் பார்ப்பது அரிதான நிகழ்வு கிடையாது.
Samayam Tamil 5.மலைப்பாம்பை மீட்டு மேலே வந்த நபருக்கு திடீரென ஏற்பட்ட விபரீதம்...


அவற்றை மீட்கும் வீடியோ காட்சிகளையும் நாம் பலமுறை வலைத்தளங்களில் பார்த்திருப்போம் . அதுபோல கேரளா திருச்சூரில் பாழடைந்த கிணறு ஒன்றில் மலைப்பாம்பு விழுந்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்தனர். அப்போது வீரர்களில் ஒருவரான சாகில் என்பவர் மேலிருந்து கயிற்றை கட்டி கிணற்றுக்குள் இறங்கி மலைப்பாம்பினை பிடிக்க முயன்றார். ஒற்றை கயிறு என்பதால் சாகில் தனது ஒரு கையால் கயிற்றை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் ராட்சத மலைப்பாம்பினை பிடிக்க துணிச்சலோடு முயன்றார்.

உனக்கு அது...எனக்கு இது; மகாராஷ்டிரா அமைச்சரவை இலாக்கா ஒதுக்கீடு

கடைசியில் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்த அவர் அந்த பாம்பை பிடித்துக்கொண்டதும் மேலே இருந்த மற்ற வீரர்கள் அவரை கயிற்றின் மூலம் மேலே இழுக்கின்றனர். இந்த நிலையில் மலைப்பாம்பு சாகில் உடலை வலுவாக சுற்றிக்கொண்டது.

இந்தியர்களின் பாஸ்போர்ட்டில் பாஜகவின் தாமரை முத்திரை: மத்திய அரசு

கிணற்றின் மேலே சற்று தூரத்தில் இருந்தபோது கயிறு அறுந்து சாடாரென மீண்டும் கிணற்றுக்குள் விழுகிறார். இந்த சம்பவத்தை பார்க்கும்போதே பதைபதைக்க வைக்கிறது. பின்னர் வனத்துறையினர் சாகில் மற்றும் பாம்பினை மீட்டுள்ளனர்.

அடுத்த செய்தி