ஆப்நகரம்

மின்துறை அமைச்சர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு ஜனநாயக விரோதம்; சித்தராமையா தாக்கு...!

கர்நாடக மின் துறை அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு ஜனநாயக விரோதமானது என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

TNN 2 Aug 2017, 4:01 pm
பெங்களூரு: கர்நாடக மின் துறை அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு ஜனநாயக விரோதமானது என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil siddaramaiah terms it raids against his minister as undemocratic
மின்துறை அமைச்சர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு ஜனநாயக விரோதம்; சித்தராமையா தாக்கு...!


கர்நாடக மாநிலத்தின் மின் துறை அமைச்சர் ஷிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குஜராத்தைச் சேர்ந்த 44 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது அரசின் மீது களங்கம் விளைவிக்கவும், நெருக்கடி கொடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளார். இந்த சோதனையில் மாநில போலீசார் பயன்படுத்தப்படவில்லை என்றும், விதிகளை மீறி மத்திய ரிசர்வ் போலீசார் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் கையாளாக வருமான வரித்துறையினர் செயலாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். இதற்கு மக்கள் விரைவில் மத்திய அரசிற்கு பாடம் புகட்டுவார்கள் என்று சித்தராமையா மிகுந்த கோபத்துடன் கருத்து தெரிவித்தார்.

Siddaramaiah terms IT raids against his minister as 'undemocratic'.

அடுத்த செய்தி