ஆப்நகரம்

விவசாயிகளுக்கு ஆதரவாக சீக்கிய குரு தற்கொலை!

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல சீக்கிய குரு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Samayam Tamil 16 Dec 2020, 10:15 pm
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை விவசாயிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துவிட்டன.
Samayam Tamil sant ram singh


வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் எனவும், விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மறுபுறம், சட்டங்களை அரசு ரத்து செய்ய வைப்போம் எனவும், போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

செம சீன் கம்யூனிஸ்ட்; சர்ப்ரைஸ் பாஜக; உள்ளாட்சி தேர்தல் லேட்டஸ்ட் முடிவுகள்!

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சீக்கிய குரு ஒருவர் போராட்டக் களத்திற்கு வந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹரியானா மாநிலம் கர்னலில் உள்ள கிங்ரா கிராமத்தை சேர்ந்த சீக்கிய குரு சந்த் பாபா ராம் சிங் இன்று டெல்லி-சோனிபட் எல்லைக்கு வந்தார்.

அங்கு வந்தவுடன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் சந்த் பாபா ராம் சிங். அவரது தற்கொலை கடிதத்தில், விவசாயிகளுக்கு அரசு அநீதி இழைப்பதாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக தன் உயிரை தியாகம் செய்துகொள்ள முடிவுசெய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது கடிதத்தில், “உரிமைக்காக போராடும் விவசாயிகளின் வலியை நான் உணருகிறேன். அவர்களுக்கு அரசு அநீதி இழைக்கிறது. ஒருவருக்கு அநீதி வழங்குவது பாவமாகும். அதேபோல அநீதியை பொறுத்துக்கொள்வதும் பாவம்தான். விவசாயிகளுக்கு ஆதரவாக சிலர் விருதுகளை திருப்பிக் கொடுத்துவிட்டனர். நான் என் உயிரையே கொடுக்க முடிவுசெய்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

விக்ரம் மகனாச்சே: த்ருவிடம் வேறு என்னத்த எதிர்பார்க்க

அவரது உடல் கல்பனா சாவ்லா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குருவின் மரணச் செய்தி வெளியானவுடன், அவர் குருவாக இருந்த நானக்ஸார் சிங்ராவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி