ஆப்நகரம்

வறுமையை ஒழிப்பதில் சிக்கிம் முதலிடம்: முதல்வர் பெருமிதம்

உலகிலேயே வறுமையை வேகமாக ஒழிப்பது சிக்கிம் அரசுதான் என அம்மாநில முதல்வர் பவன் குமார் சம்லிங் கூறியுள்ளார்.

Samayam Tamil 16 Aug 2018, 4:28 am
உலகிலேயே வறுமையை வேகமாக ஒழிப்பது சிக்கிம் அரசுதான் என அம்மாநில முதல்வர் பவன் குமார் சம்லிங் கூறியுள்ளார்.
Samayam Tamil 1534332273-pawan_chamling


சிக்கிம் முதல்வர் பவன் குமார் சம்லிங் புதன்கிழமை ஆற்றிய சுதந்திர தின உரையின் போது, "கடந்த 24 ஆண்டுகளில் மாநிலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டு வருகிறுது. உலகிலேவே வேகமாக வறுமை ஒழிப்பு நடவடிக்கை எடுப்பது சிக்கிம் அரசுதான்" என்று தெரிவித்தார்.

2004-05ல் 30.9% ஆக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை 2011-12ல் 8.19% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்ற அவர், நாட்டின் முதல் வறுமை இல்லாத மாநிலமாக சிக்கிம் மாநிலத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்படுவதாகவும் கூறினார்.

"கோயில், கும்பா, தேவாலயம் என மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதாக ஒரு வழக்குகூட பதிவாகவில்லை. மத துவேஷத்தாலோ கலவரத்தாலோ ஒரு உயிர்கூட பறிபோகவில்லை." என்றும் முதல்வர் பவன் குமார் சம்லிங் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி