ஆப்நகரம்

லாட்டரி மார்ட்டினின் ரூ.120 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

கோவையைச் சேர்ந்த லாட்டரி மார்ட்டின் மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் மார்ட்டினுக்குச் சொந்தமான ரூ.120 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Samayam Tamil 23 Jul 2019, 11:18 am
சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கோவையைச் சேர்ந்த லாட்டரி மார்ட்டினின் ரூ.120 கோடி சொத்துகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil Lottery Martin


தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் மேற்கு வங்கம், சிக்கிம், அசாம் போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு கோடீஸ்வரரானவர் மார்ட்டின். லாட்டரி விற்பனை மட்டுமின்றி ஹோமியோபதி மருத்துவமனை, தெழிற்காலைகள், டிவி சேனல்கள் துறைகளிலும் மார்டின் தொழில் செய்து வருகிறார்.

இதனால், மார்ட்டின் குடும்பத்தினருக்கு அரசியல் வட்டாரத்தில் சில முக்கிய புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வருமான வரித்துறை, சிபிஐ ரெய்டு உள்ளிட்டவற்றில் மார்ட்டின் குழுமம் அவ்வபோது சிக்குவதும் வழக்கமாகிவிட்டது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் மார்ட்டின் தொடர்பான 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், சிக்கிம் லாட்டரி சட்டப்பிரிவை மதிக்காமல், மார்ட்டின் நிறுவனம் சிக்கிம் அரசை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2009 – 2010ம் ஆண்டு பரிசுப் பொருட்கள் விற்றதன் மூலம் சட்டவிரோதமாக ரூ.900 கோடி அளவிற்கு மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனங்கள் வருவாயாக பெற்றுள்ளன.

மேலும் இந்த பணம் 40 நிறுவனங்களில் அசையா சொத்துகளாக முதலீடும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மார்ட்டினின் கேமிங் ஹோட்டல் நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.120 கோடி சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி