ஆப்நகரம்

என்னது 10 லட்சம் பேர் தேர்வு எழுதலயா? கேள்விகளை ஈஸியா கேளுங்கப்பா; யோகி செம ஐடியா!

பள்ளித் தேர்வுகளை எளிமையாக கேட்கும்படி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 11 Feb 2018, 3:10 pm
லக்னோ: பள்ளித் தேர்வுகளை எளிமையாக கேட்கும்படி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil simplify the exams of school students says up cm yogi adityanath
என்னது 10 லட்சம் பேர் தேர்வு எழுதலயா? கேள்விகளை ஈஸியா கேளுங்கப்பா; யோகி செம ஐடியா!


உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் 10வது, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.

வழக்கமாக துணிந்து காப்பியடிக்கும் மாணவர்கள், இம்முறை கெடுபிடியால் தேர்வை புறக்கணித்தனர்.

உத்தரப்பிரதேச வரலாற்றில் முதல் முறையாக பள்ளிப் பொதுத் தேர்வுகளை சுமார் 10 லட்சம் மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.

இதனையறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாணவர்களுக்கு கஷ்டமாக கேள்வி கேட்டால், இப்படித்தான் செய்வார்கள்.

இனிமேல் எளிதாக கேள்வி கேளுங்கள். அப்போது தான் தேர்வு அறைக்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார். பொதுவாக காப்பியடிக்க வாய்ப்பிருந்தால் தான் தேர்வு எழுத மாணவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

இவரது கருத்தை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.

Simplify the exams of school students says UP CM Yogi Adityanath.

அடுத்த செய்தி