ஆப்நகரம்

“புதிய 500 ரூபாய் வந்துவிட்டதால் சில்லறை பிரச்னை விரைவில் தீரும்” : சக்திகாந்த தாஸ்

“புதிய 500 ரூபாய் வந்துவிட்டதால் சில்லறை பிரச்னை விரைவில் தீரும்” : சக்திகாந்த தாஸ்

TNN 3 Dec 2016, 3:44 am
புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துவிட்டதால் சில்லறை பிரச்னை விரைவில் முற்றிலுமாக தீரும் என பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil situation will ease soon with circulation of more rs 500 notes shaktikanta das
“புதிய 500 ரூபாய் வந்துவிட்டதால் சில்லறை பிரச்னை விரைவில் தீரும்” : சக்திகாந்த தாஸ்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். பல்வேறு உயிரிழப்புகளும் இதனால் ஏற்பட்டுள்ளன. கருப்புப்பணம் ஒழிப்பிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அரசு கூறினாலும், பாதிக்கப்பட்டது நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் என்பதே உண்மை. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டை அரசு வெளியிட்டது. ஆனால் 2000 ரூபாய்க்கு சில்லறை கிடைப்பது பெரும் பாடாக உள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

100 ரூபாய் நோட்டுகள் பற்றாக்குறை என்பதால் 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழங்க தொடங்கினால் மட்டுமே சில்லறை தட்டுப்பாட்டிற்கு தீர்வு ஏற்படும். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்தி தாஸ் விரைவில் சில்லறை பிரச்னை தீரும் என்று உறுதியளித்துள்ளார். ஆர்பிஐ 500 ரூபாய் நோட்டுளை வங்கிகளுக்கு அனுப்பிவிட்டதாகவும், அதனால் அவை அதிக அளவில் புழக்கத்திற்கு வரத்தொடங்கியதும் சில்லறை பிரச்னை தீரும் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி