ஆப்நகரம்

ஆப்கனில் 6 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 6 பொறியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைக்காக அந்நாட்டுடன் தொடர்பில் உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2018, 10:16 pm
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 6 பொறியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைக்காக அந்நாட்டுடன் தொடர்பில் உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil baglan-759


ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 பொறியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர். அந்நாட்டின் பாக்லான் மாகாணத்தின் தலைநகரான புல்-இ-கோமர் நகருக்கு அருகே உள்ள பாக-இ-ஷமால் என்ற கிராமத்தில் அவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களில் 6 பேர் இந்தியர்கள் என்றும் ஒருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்துள்ளது. இந்நிலையில், கடத்தப்பட்ட 6 இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்க அந்நாட்டு அரசுடன் தொடர்பில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்துள்ள வெளியுறவுத்துறை செயலாளர் ரணீஷ் குமார், "ஆப்கானிஸ்தான் பாக்லானில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதில் வெளியிறவுத்துறை கவனம் செலுத்துகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கை குறித்து தகவல்களை பெற்று வருகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தாலிபன் பயங்கரவாதிகள்தான் 7 பேரையும் கடத்திச் சென்றதாக பாக்லான் மாகாண ஆளுநர் அப்துல்ஹாய் நெமாட்டி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், தாலிபன்கள் இது பற்றி எந்த விவரமும் வெளியிடவில்லை.

அடுத்த செய்தி