ஆப்நகரம்

தமிழில் பேசி ராஜ்ய சபாவில் கெத்தாக பதவியேற்ற 6 தமிழக எம்.பிக்கள்!

ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக எம்.பிக்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

Samayam Tamil 25 Jul 2019, 11:39 am
நாடாளுமன்றத்தில் மேலவை என்று அழைக்கப்படும் ராஜ்ய சபாவிற்கு மாநில எம்.எல்.ஏக்கள், மக்களவை எம்.பிக்கள் சேர்ந்து உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். தற்போது தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அதிமுக, திமுகவிற்கு தலா 3 எம்.பிக்களுக்கு இடமுண்டு.
Samayam Tamil Vaiko MP


கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகத்தின் ராஜ்ய சபா சீட்களுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி கடந்த ஜூலை 18ஆம் தேதி ராஜ்ய சபா தேர்தல் நடைபெற்றது.

திமுக உடன்பாட்டால் 22 ஆண்டுக்கு பின் மாநிலங்களவை எம்.பி ஆனார் வைகோ!

அதில் திமுக சார்பில் வில்சன், சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொரு சீட் தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி, மதிமுகவிற்கு வழங்கப்பட்டது. அதன்படி வைகோ ராஜ்ய சபா எம்.பி ஆனார்.

அதிமுகவைப் பொறுத்தவரை முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொரு சீட் தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி, பாமகவிற்கு அளிக்கப்பட்டது. அதன்படி, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி எம்.பி ஆனார்.

தமிழகத்திற்கு மாநிலங்களவை தேர்தல் - ஒரு பார்வை ...!

இவர்கள் அனைவரும் இன்று ராஜ்ய சபாவில் முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். அப்போது தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

யார் அந்த வில்சன்? 6 அடியை பெற்றுக் கொடுத்த ”வின்”சனுக்கு திமுக இப்படியொரு மரியாதை!

அடுத்த செய்தி