ஆப்நகரம்

இந்தியாவில் புதிய கொரோனா: 6 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் ஆறு பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Samayam Tamil 29 Dec 2020, 10:43 pm
இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கெனவே பரவும் கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனா 70% அதிக வேகத்தில் பரவுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்தது.
Samayam Tamil Representational image


இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இங்கிலாந்து இடையேயான விமானப் போக்குவரத்துக்கு கடந்த வாரம் இந்திய அரசு தடை விதித்தது. எனினும், தடை அமலாவதற்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ரோட்டில் சாணி போட்ட எருமை மாடு: ஓனருக்கு ரூ.10 ஆயிரம் ஃபைன்!
அவர்களுக்கு புதிய கொரோனா பாதித்திருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த பெண் ஒருவர் ரயில் ஏறி ஆந்திராவுக்கு தப்பியோடிவிட்டார். அவருக்கு வயது 47.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு புதிய கொரோனா பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் அந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே புதிய கொரோனா பாதித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் மகனுக்கு கொரோனா நெகட்டிவ் என தெரியவந்துள்ளதாக சுகாதார ஆணைய கடமானேனி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தியாவில் மொத்தம் ஆறு பேருக்கு புதிய கொரோனா பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், பெங்களூருவில் மூன்று பேர், ஹைதராபாத்தில் இரண்டு பேர், புனேவில் ஒருவர் அடங்குவர்.

கட்சியே வேணாம்னு ரஜினி சொல்லும் அளவுக்கு ஹைதராபாத்தில் நடந்தது என்ன?
நவம்பர் 25ஆம் தேதிக்கும் டிசம்பர் 25ஆம் தேதிக்கும் இடையே 33,000 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், புதிய கொரோனா பாதித்துள்ளதா என கண்டறிய பரிசோதனை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி