பெங்களூரு:: காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் ராஜினாமா செய்த அக்கட்சியின் மூத்த தலைவர் எஸ்எம் கிருஷ்ணா பாஜக-வில் இன்று இணையவுள்ளார்.
கடந்த 1999-ஆம் ஆண்டில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, அப்போது நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடக முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து, 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை முதல்வராக பொறுப்பில் இருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என வேதனை தெரிவித்த எஸ்.எம்.கிருஷ்ணா, அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகினார். மேலும், தனது கட்சிப் பொறுப்பையும் ராஜினாமா செய்த அவர், கூடிய விரைவில் பாஜக-வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பாஜக-வில் 100 சதவீதம் அவர் இணைவது உறுதி எனவும், ஆனால், இணையும் தேதி இன்னும் முடிவாகவில்லை எனவும் அக்கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில், எஸ்எம் கிருஷ்ணா பாஜக-வில் இன்று இணையவுள்ளார்.
SM Krishna likely to join BJP today