ஆப்நகரம்

பாம்பு கடித்து இறந்தால் ரூ.4 லட்சம் நிவாரணம்

பாம்பு கடித்து இறப்பவர்களுக்கு ரூ. 4லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 5 Aug 2018, 5:29 pm
பாம்பு கடித்து இறப்பவர்களுக்கு ரூ. 4லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil snake-breeder-abdul-sattar-remove-their-snake_025cc794-9868-11e8-bd6f-c32900bc590c


உத்தரப் பிரதேச மாநில அரசு பேரிடர் நிவாரண நிதியை விரிவுப்படுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாம்புக் கடியால் உயிரிழப்பவர்கள், படகு கவிழ்ந்த விபத்தில் இறப்பவர்கள், கழிவுநீர் குழாயை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மரணமடைபவர்கள் ஆகியோருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த வகையில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாகக் கிடைக்கும்.

பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நில நடுக்கம் மற்றும் வானிலை மாற்ற பாதிப்புகள் மட்டுமே இருந்த நிலையில் அதனை உ.பி. அரசு மாற்றி அமைத்துள்ளது.

அடுத்த செய்தி