ஆப்நகரம்

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா வெளிநாடு பயணம்; உடன் ராகுலும் செல்கிறார்

மருத்துவப் பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா வெளிநாடு செல்லவுள்ளார் எனவும், அவருடன் துணைத் தலைவர் ராகுலும் செல்லவுள்ளார் எனவும் அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

TNN 16 Mar 2017, 5:06 pm
புதுதில்லி: மருத்துவப் பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா வெளிநாடு செல்லவுள்ளார் எனவும், அவருடன் துணைத் தலைவர் ராகுலும் செல்லவுள்ளார் எனவும் அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sonia gandhi likely to go abroad for health check up rahul also accompained with her
மருத்துவ பரிசோதனைக்காக சோனியா வெளிநாடு பயணம்; உடன் ராகுலும் செல்கிறார்


காங்கிரஸ் தலைவர் சோனியாவின் (70) உடல்நிலை, அண்மை காலங்களில் அடிக்கடி பாதிப்படைந்து வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா சென்ற சோனியா, வெளியில் தெரிவிக்கப்படாத மருத்துவ காரணங்களுக்காக சிகிச்சை பெற்றுத் திரும்பினார். அதேபோல், கடந்த 2014-ஆம் ஆண்டில் நோய் தொற்றுக்காக தில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மேலும், கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் வாகன பேரணி நடத்தியபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது உடனே தில்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதனையடுத்து, தேர்தல் பிரசாரங்களில் அவர் பங்கேற்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான போது கூட வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அவர் இருந்தார் என அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா வெளிநாடு செல்லவுள்ளார் எனவும், அவருடன் துணைத் தலைவர் ராகுலும் செல்லவுள்ளார் எனவும் அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் எந்த நாட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ள செல்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. வெளியில் தெரிவிக்கப்படாத மருத்துவ காரணங்களுக்காக அவர் சிகிச்சை பெற்றது அமெரிக்கா என்பதால், மருத்துவப் பரிசோதனைக்காக அந்நாட்டுக்கே அவர் மீண்டும் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Sonia Gandhi likely to go abroad for health check up Rahul also accompained with her

அடுத்த செய்தி