ஆப்நகரம்

'ஒன்னுமே இல்ல’ ஒரு வரியில் மோடியை ‘அஃப்’ செய்து தெறிக்கவிட்ட சோனியா!

மக்களவையில் பிரதமர் மோடி உரையில் ஒன்னுமே இல்லை வேலைவாய்ப்புகள் மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள், சொற்பொழிவை அல்ல என’ மோடியின் பேச்சுக்கு சோனியாகாந்தி ஒரேவரியில் பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 7 Feb 2018, 6:46 pm
’மக்களவையில் பிரதமர் மோடி உரையில் ஒன்னுமே இல்லை வேலைவாய்ப்புகள் மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள், சொற்பொழிவை அல்ல என’ மோடியின் பேச்சுக்கு சோனியாகாந்தி ஒரேவரியில் பதிலடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil sonia gandhi reaction pm modi speech employment
'ஒன்னுமே இல்ல’ ஒரு வரியில் மோடியை ‘அஃப்’ செய்து தெறிக்கவிட்ட சோனியா!


நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்தார்.

அவர் பேசியபோது, ‘’எங்களுக்கு ஜனநாயகம் குறித்து பாடம் எடுக்கக் வேண்டாம். உங்கள் தலைவர் தான் அவசர சட்ட நகலை கிழித்து பத்திரிகையாளர் முகத்தில் எறிந்தார். உங்களது தலைவர்தான், இளைய தலைவர்களின் கருத்துக்களை கேட்காமல் குரல் வலைகளை நெறித்து வருகிறார். ஜனாதிபதியின் பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சியினருக்காக அவரது பேச்சை நிராகரிக்கக் கூடாது.

பண்டிட் நேரு அவர்களால் இந்தியாவுக்கு ஜனநாயகம் கிடைக்கவில்லை. சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் நமது நாட்டின் முதல் பிரதமராக இருந்து இருந்தால், காஷ்மீர் முழுவதும் இன்று இந்தியாவின் கையில் இருந்து இருக்கும். காங்கிரஸ் சரியான கொள்கைகள் மற்றும் சரியான திட்டங்களை கொண்டு வந்து இருந்தால், வளர்ச்சியில் இந்தியா இன்று எங்கோ சென்று இருக்கும்.

இந்நிலையில், மக்களவையில் பிரதமர் மோடி உரை குறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி,’ மோடியின் உரையில் ஒன்றும் இல்லை, பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்புகள் மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள், சொற்பொழிவை அல்ல.’ என ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார்.

sonia gandhi reaction pm modi speech employment

அடுத்த செய்தி