ஆப்நகரம்

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு கட்டாயம்!

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

TNN 15 Sep 2017, 3:54 pm
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
Samayam Tamil soon aadhaar to be linked with drivers license says union minister rs prasad
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு கட்டாயம்!


சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், வருமான வரி தாக்கல், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அண்மையில், இறப்புச் சான்றிதழ் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதையும் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் இதுகுறித்து பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் நடைபெற்ற டிஜிட்டல் ஹரியானா மாநாட்டில் பங்கேற்றபோது அமைச்சர் ரவிசங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி