ஆப்நகரம்

36 நாடுகளுக்கு இ-விசா சேவை

டெல்லி: ஈரான்,இத்தாலி,எகிப்தி,நைஜிரியா உள்ளிட்ட 36 நாடுகளுக்கு இ-விசா சேவையை விரிவுபடுத்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் திட்டமிட்டடுள்ளது.

TOI Contributor 13 Jul 2016, 12:59 pm
டெல்லி: ஈரான்,இத்தாலி,எகிப்து,நைஜிரியா உள்ளிட்ட 36 நாடுகளுக்கு இ-விசா சேவையை விரிவுபடுத்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் திட்டமிட்டடுள்ளது.
Samayam Tamil soon e visa for another 36 countries
36 நாடுகளுக்கு இ-விசா சேவை


வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வருவதற்காக ஆன்லைன் மூலம் விசா வழங்கும் திட்டத்தை 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது .இ-விசா திட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம்வரை 150நாடுகள் இணைந்துள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து மேலும் 36 நாடுகளுக்கு இந்த சேவையை விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.இதுதொடர்பான பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் மொத்தம் 186நாடுகளுக்கு இந்த சேவை விரிவுப்படுத்தப்படும்.

"இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜுன் வரை 4,71,909 பேர் சுற்றுலாவிற்காக இ-விசா மூலம் இந்தியாவ வந்துள்ளனர்.கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜுன் வரை 1,26,214 பேர் சுற்றுலா வந்துள்ளனர்.2015ம் ஆண்டை விட 2016ம் ஆண்டில் இ-விசா மூலம் இந்தியா வந்தவர்களின் எண்ணிக்கை 273.9 சதவீதம் அதிகரித்துள்ளது"என சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி