ஆப்நகரம்

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? - மத்திய அரசு சொல்வது இதுதான்!!

உணவகங்களில் குளிர்சாதன பெட்டியை (ஏசி) இயக்குவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 5 Jun 2020, 2:11 am
பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30) அறிவித்திருந்தது.
Samayam Tamil restarants


இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரலல் தடுப்பு நடவடிக்கைகளாக, உணவகங்கள கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது, அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள உணவகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுதான் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத இடங்களில் உள்ள உணவகங்களை திறக்கலாம்.

பணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா?: மத்திய அரசு சொல்வது இதுதான்!!

வாடிக்கையாளர்களை உணவகத்துக்குள் அனுமதிப்பதைவிட, அவர்களின் இல்லம் தேடி சென்று உணவுகளை விநியோகம் செய்து நல்லது.

அவ்வாறு டோர் டெலிவரி செய்யும்போது, உணவுப் பொட்டலங்களை வாடிக்கையாளர்களின் கைகளில் நேரடியாக தருவதை உணவக பணியாளர்கள் தவிர்க்க வேண்டும். மாறாக, அவற்றை வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் பாதுகாப்பாக டெலிவரி செய்யலாம்.

உணவக பணியாளர்கள் அனைவரும் தினமும் பணிக்கு வரும் முன், அவர்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட வேண்டும். இதேபோன்று, பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருப்பது உணவக உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஷாப்பிங் மால் போறீங்களா? இதெல்லாம் கவனத்துல வச்சுக்கோங்க!

வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் (பார்க்கிங் ஏரியா), உணவகங்களிலும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை (6 அடி இடைவெளி) கடைபிடிப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

பணியாளர்கள், சமையல் பொருள்கள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்பவர்கள் உணவகங்களுக்கு வந்துச் செல்ல தனி வழியை ஏற்படுத்தப்பட வேண்டும்.

வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் ஒவ்வொரு முறையும், அவர்கள் அமர்ந்து உணவருந்திய மேஜை, நாற்காலிகள் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

உணவக வளாகத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகள் இருந்தால், அவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது.

முக்கியமாக, உணவகங்களில் ஏசியை இயக்க விரும்பினால், அவற்றை மத்திய பொதுப் பணித் துறை வகுத்துள்ள விதிமுறைகளின்படிதான் இயக்க வேண்டும்.

அதாவது, குளிர்சாதன கருவிகளை இயக்கும்போது அவற்றின் வெப்பநிலை 24 - 30 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதேபோன்று, அவற்றின் ஈரப்பதமும் 40 -70 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி