ஆப்நகரம்

Delhi Governor resign: ஆளுநர் திடீர் ராஜினாமா முடிவுக்கு என்ன காரணம்?

தமது பதவியை ராஜினாமா செய்வதாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 18 May 2022, 5:49 pm

ஹைலைட்ஸ்:

  • டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா அறிவிப்பு
  • தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவு என அறிவிப்பு
  • டெல்லியின் 21 ஆவது துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் பதவி வகித்து வந்தார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஆளுநர் ராஜினாமா
டெல்லி துணை நிலை ஆளுநர் ராஜினாமா
டெல்லி துணை நிலை ஆளுநராக இதுநாள்வரை பதவி வகித்து வந்தவர் அனில் பைஜால். இவர் தமது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாகவும், ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் 21 ஆவது துணை நிலை ஆளுநராக கடந்த 2016 டிசம்பரில் பொறுப்பேற்ற அனில் பைஜால் சுமார் ஐந்தரை ஆண்டுகள் அந்த பதவியை வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி