ஆப்நகரம்

குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினர் கிடையாது!

இந்த ஆண்டும் குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினர் கிடையாது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 19 Jan 2022, 9:12 pm
வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளிலும் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. குடியரசு தின விழாவில் பங்கேற்க வேண்டிய அலங்கார ஊர்திகளில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Samayam Tamil Republic day parade


இது மட்டுமல்லாமல் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கி எல்லா மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர் பங்கேற்க மாட்டார்கள் என அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வெளிநாடுகளின் பிரதமர் அல்லது அதிபர் என பெரிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பிப்பார்கள்.

பாஜகவில் இணைந்தார் பிபின் ராவத்தின் தம்பி விஜய் ராவத்!
கடந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனை சிறப்பு விருந்தினராக அழைத்துவர திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்ததால் அவரது வருகை ரத்தானது. எனவே, சிறப்பு விருந்தினரே இல்லாமல் கடந்த ஆண்டு குடியரசு தின விழா நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர் யாருமில்லை என மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். மூன்றாம் அலை தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி