ஆப்நகரம்

கேரளாவில் 3 நாட்கள் முன்னதாக தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

Samayam Tamil 29 May 2018, 2:51 pm
டெல்லி: தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
Samayam Tamil Kerala Rains


ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். கேரளாவில் தொடங்கும் பருவமழை படிப்படியாக, தமிழகம் நோக்கி திரும்பும். ஆனால் நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

தற்போது தென்கிழக்கு ஆப்பிரிக்கக் கடல், கொமோரின் - மாலத் தீவுகள் பகுதி, லட்சத் தீவு, கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.

இதனால் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இது வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக நிகழ்ந்துள்ளது. கேரளாவில் கடந்த 3 - 4 நாட்கள் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது 14 மழைப்பொழிவு மையங்கள் மூலம் 60% மழைப்பொழிவை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

South west monsoon hits Kerala 3 days before says IMD.

அடுத்த செய்தி