ஆப்நகரம்

அந்தமான் நிகோபார் தீவுகளில் முன்னரே தொடங்கிய பருவமழை!

அந்தமான் நிகோபார் தீவுகளில் முன்னரே தொடங்கிய பருவமழை!

TOI Contributor 14 May 2017, 9:46 pm
அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை காலமானது எப்போதும் தொடங்குவதற்கு மாறாக மூன்று நாட்களுக்கு முன்னரே தொடங்கியுள்ளது.
Samayam Tamil southwest monsoon arrives 3 days early in andaman and nicobar islands
அந்தமான் நிகோபார் தீவுகளில் முன்னரே தொடங்கிய பருவமழை!


வலுவாக வீசும் தென்மேற்கு காற்று, மேகமூட்டம் மற்றும் மழைப்பொழிவு என்று வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதி, நிகோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதி முழுவதும் காணப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தென்மேற்கு பருவ மழை எப்போதும் பொழிவதை விட முன்னரே பொழிய தொடங்கியுள்ளதாக வானிலை மைய இயக்குநர் கேஜி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மே 17ஆம் தேதி அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அதனை தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கும். அதன்படி பார்த்தால் தற்போது அந்தமானில் முன்னரே பருவமழை தொடங்கியுள்ளது. இதை வைத்து கேரளாவிலும் ஜூன் மாதத்திற்கு முன்னரே பருவமழை தொடங்கிவிடும் என்று சொல்லமுடியாது என்று ரமேஷ் கூறியுள்ளார்.

கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி அல்லது ஓரிரு நாட்கள் முன்பு அல்லது பின்பு தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தனியா் வானிலை மையமான ஸ்கைமெட்டின் தலைமை வானியல் ஆய்வாளர் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளார். மேலும் வங்காளவிரிகுடாவின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை விரைவிலேயே தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

அடுத்த செய்தி