ஆப்நகரம்

கேரளாவில் நாளை துவங்குகிறது தென்மேற்கு பருவமழை- வானிலை மையம் அலர்ட்!

கேரளாவில் நாளை பலத்த மழையுடன் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது!

Samayam Tamil 7 Jun 2019, 1:58 pm
கேரளாவில் நாளை பலத்த மழையுடன் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கேரளாவில் நாளை துவங்குகிறது தென்மேற்கு பருவமழை- வானிலை மையம் அலர்ட்!
கேரளாவில் நாளை துவங்குகிறது தென்மேற்கு பருவமழை- வானிலை மையம் அலர்ட்!


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மூலமே 70% மழைப்பொழிவு கிடைக்கிறது. கேரளாவில் வழக்கமாக மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் - தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஆனால் அரபிக்கடலின் மேற்குப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கேரளாவில் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளிலும், கேரள மாநிலத்தின் கடலோர மாவட்டம் மற்றும் பல பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு கேரளாவில், தென்மேற்கு பருவமழை இயல்பை விட 23% அதிகமாக பதிவானது. மழைப் பொழிவால் பெரு வெள்ளம் ஏற்பட்டதால், இந்த முறை மீட்புப் படை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்திலும் ஓரளவு மழை பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழையை நம்பி விவசாயிகளும், பொதுமக்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அதே நேரம் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். டெல்லி, சண்டிகர், பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 கி.மீட்டர் வேகத்தில் புழுதிப்புயல் வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி