ஆப்நகரம்

மும்பையில் கனமழையால் சேற்றில் சிக்கிய விமானம்

மும்பையில் பெய்து வரும் கனமழையால் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் அதன் ஓடுதளப்பாதையில் இருந்து விலகி சேற்றில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

TOI Contributor 20 Sep 2017, 4:02 am
மும்பையில் பெய்து வரும் கனமழையால் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் அதன் ஓடுதளப்பாதையில் இருந்து விலகி சேற்றில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil spicejet flight overshoots mumbai airport runway lands in mud
மும்பையில் கனமழையால் சேற்றில் சிக்கிய விமானம்

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றன. இந்நிலையில், வாரனாசியில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் அதன் ஓடுதளப்பாதையில் தரையிறங்கியது.

கனமழை காரணமாக ஓடுதளப்பாதை ஈரமாக இருந்ததால், விமானம் சற்று விலகி சேற்றில் சென்று சிக்கிக்கொண்டது. இதனால், விமானத்தில் இருந்த 183 பயணிகளும் பதற்றமடைந்தனர். உடனே, பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இதனால், விமான நிலையத்தின் வழக்கமான நடவடிக்கைகள் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. மேலும், மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மும்பை நகரம் முழுவதும் இன்று பிற்பகல் வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

அடுத்த செய்தி