ஆப்நகரம்

அடப்பாவமே! எக்ஸ்-ரே ரூமுக்கு நோயாளியை இப்படியா இழுக்கிறது- அரசு மருத்துவமனை அவலம்!

அரசு மருத்துவமனை ஒன்றில், நோயாளியை பெட்ஷீட்டில் வைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Jul 2019, 12:11 pm
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வர்.
Samayam Tamil MP Patient


இதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிர்ச்சிகர வீடியோ ஒன்று வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரால் நடக்க முடியவில்லை. இந்த சூழலில் அவருக்கு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து அங்கிருந்த மருத்துவமனை ஊழியர், உடனே பெட்ஷீட் ஒன்றை கொண்டு வந்துள்ளார்.

அதில் நோயாளியை அமர வைத்து, தர தர வென்று இழுத்துக் கொண்டு எக்ஸ்-ரே ரூமுக்கு செல்கிறார். இதனை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இது காண்போரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. ஏழைகள், நடுத்தர மக்கள் பெரிதும் நம்பி இருப்பது அரசு மருத்துவமனைகளைத் தான். குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது என்பதற்காக, அடிப்படை வசதிகளை கூடவே முறையாக ஏற்படுத்தி வைக்காமல் இருப்பது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனை நிர்வாகம், சம்பந்தப்பட்ட மூன்று ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை டீன் நவ்னீத் சக்சேனா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி