ஆப்நகரம்

சனி, ஞாயிறு முழு ஊரடங்கு: அரசு அதிரடி அறிவிப்பு!

கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 12 Jun 2021, 9:35 am
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிய நிலையில் கேரளாவிலும் கணிசமாக பாதிப்பு அதிகரித்தது. இதனால் கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து பாதிப்புகளை அம்மாநில அரசு குறைத்து வருகிறது.
Samayam Tamil lockdown


மே 8 ஆம்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் அம்மாநிலத்தில் மே 16, மே 23, மே 31 என மும்முறை நீட்டித்தது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூன் 16ஆம் தேதி வரை நீடிக்கிறது.
கொரோனா 2வது அலை முடியப் போகுது; செம சர்ப்ரைஸ் கொடுத்த களநிலவரம்!
இந்நிலையில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினம் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி உணவகங்களில் பார்சல் சேவையும் நிறுத்தப்படுகிறது அதேசமயம் உணவுகள் டோர் டெலிவரி மட்டும் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் தனி மனித இடைவெளியை பின்பற்றி அப்பணிகள் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் கொரோனா தடுப்பூசி மண்டலங்களாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு
கேரளாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 14 ஆயிரத்து 233 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 173 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 2060 பேரும், எர்ணாகுளத்தில் 1629 பேரும் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி