ஆப்நகரம்

இந்தியா பின் தங்க இந்த 5 மாநிலங்கள் தான் காரணம்; நிதி ஆயோக் தலைவர் குற்றச்சாட்டு!

வளர்ச்சியில் பின் தங்க காரணமான மாநிலங்கள் குறித்து, இங்கே காணலாம்.

Samayam Tamil 24 Apr 2018, 4:34 pm
டெல்லி: வளர்ச்சியில் பின் தங்க காரணமான மாநிலங்கள் குறித்து, இங்கே காணலாம்.
Samayam Tamil Amitabh Kant
அமிதாப் கந்த்


டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் ’கான் அப்துல் கபார் கான்’ நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ஆனால் கிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து பின் தங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக பீகார், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் நாட்டின் முன்னேற்றத்தை வெகுவாக பின் தள்ளிக் கொண்டிருக்கிறது.

இது உலக அளவில் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. தொழில்துறை முன்னேற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மனித வள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் பின் தங்கியுள்ளோம்.

188 நாடுகள் இடம்பெற்றுள்ள பட்டியலில், இந்தியா 131வது இடத்தில் உள்ளது. இதேபோல் கல்வி, சுகாதாரத்திலும் நம்நாடு பின்னால் இருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

5ஆம் வகுப்பு மாணவனால், 2ஆம் வகுப்பு பாடத்தை படிக்க முடிவதில்லை. குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. எனவே இந்த துறைகளில் கவனம் செலுத்தி, நாட்டை வளர்ச்சி பாதையில் செலுத்த வேண்டும் என்று அமிதாப் கந்த் வலியுறுத்தியுள்ளார்.

States Like Bihar, UP Keeping India Backward says NITI Aayog CEO Amitabh Kant.

அடுத்த செய்தி