ஆப்நகரம்

ராஜஸ்தானில் உருவாகும் 351 அடி உயர சிவன் சிலை

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட சா்தாா் வல்லபாய் படேல் சிலை உலகின் மிகப்பெரிய சிலை என்று பெயா் பெற்ற நிலையில், 351 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாகி வருகிறது.

Samayam Tamil 31 May 2019, 9:40 pm
ராஜஸ்தான் மாநிலத்தில் 351 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Sivan Statue Rajasthan


அண்மையில் குஜராத் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சா்தாா் வல்லபாய் படேல் சிலை திறந்து வைக்கப்பட்டது. தற்பொது ராஜஸ்தான் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள நதட்வாரா என்ற பகுதியில் இச்சிலை தற்போது உருவாகி வருகிறது. 351 அடி உயரத்தில் 2 ஆயிரத்து 500 டன் இரும்பைக் கொண்டு இச்சிலை தயாராகி வருகிறது. இதில் சின் உருவத்தின் தோள் பகுதி வரையிலான உயரம் மட்டும் 260 அடி.


20 அடி உயரத்தில் 3 பாா்வை மாடங்கள், லிப்ட் என பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி உருவான இத்திட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

உலக அளவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலை, சீனாவின் புத்தா் சிலை, மியான்மரில் லேகுன் செக்யா சிலையைத் தொடா்ந்து நான்காவது பெரிய சிலையாக ராஜஸ்தான் சிவன் சிலை இருக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி