ஆப்நகரம்

ஜம்முவில் என்.ஐ.ஏ அதிரடி; பெருமளவு குறைந்த கல்வீச்சு சம்பவங்கள்: ராஜ்நாத் சிங்...!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் என்.ஐ.ஏவின் அதிரடி நடவடிக்கையால், கல்வீச்சு சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

TNN 20 Aug 2017, 2:24 pm
லக்னோ: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் என்.ஐ.ஏவின் அதிரடி நடவடிக்கையால், கல்வீச்சு சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil stone pelting cases decline in jk due to nia
ஜம்முவில் என்.ஐ.ஏ அதிரடி; பெருமளவு குறைந்த கல்வீச்சு சம்பவங்கள்: ராஜ்நாத் சிங்...!


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் என்.ஐ.ஏவிற்கான அலுவலகக் கட்டடத்தின் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் நக்சல்கள், தீவிரவாதம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

என்.ஐ.ஏவின் அதிரடி நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந்ததைச் சுட்டிக் காட்டினார். நாட்டின் பாதுகாப்பிற்காக உறுதியான எண்ணத்தில் இருப்பதாகவும், அதனால் கடும் நடவடிக்கைகளை எந்த நேரத்திலும் எடுப்போம் என்று குறிப்பிட்டார்.

கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான சவால்களை திறமையாக எதிர்கொண்டதாக கூறினார். வடகிழக்குப் பகுதிகளில் 75% அளவிற்கு தீவிரவாதம் குறைந்துள்ளதாக கூறிய அவர், நக்சலிசம் 35-40% அளவிற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தீவிரவாத செயல்களுக்கான நிதியை கட்டுப்படுத்தியதில் என்.ஐ.ஏவிற்கு சிறந்த பங்குண்டு. இதற்கிடையில் என்.ஐ.ஏ - மாநில அதிகாரிகள் இடையே 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங், சீரிய ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்டார்.

Stone pelting cases decline in J&K due to NIA: Rajnath Singh.

அடுத்த செய்தி