ஆப்நகரம்

Delhi Violence: காலையிலும் தொடர்ந்த கல்வீச்சு, இன்று முடிவுக்கு வருமா டெல்லி வன்முறை?

நிலைமை இன்று கட்டுக்குள் வந்துவிடும் என்று நம்பிய இடத்தில் மீண்டும் இன்று காலை கல்வீச்சு நடைபெற்றது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Samayam Tamil 25 Feb 2020, 10:06 am
டெல்லியில் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது டெல்லி வடகிழக்குப்பகுதியில் நடைபெற்று வரும் இருதரப்பு போராட்டங்கள் கலவரமாகி உயிர்பலிகள் அதிகரித்து வருகின்றன.
Samayam Tamil delhi clash



மத்திய அரசு “நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்று நேற்று இரவு அறிக்கை வெளியிட்டது. ஆனாலும், உண்மையில் நிலைமை கட்டுக்குள் இல்லை என்பதே உண்மையாக இருப்பாதாகச் சூழல் தெரிவிக்கிறது.

இந்நிலையில், டெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும்படி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் மவுஜ்பூர் மற்றும் பிரம்மபுரி ஆகிய பகுதிகளில் மீண்டும் இன்று காலை கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசரமாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

5 பேர் பலி, 60+ படுகாயம்: எல்லை மீறும் டெல்லி போர்க்களம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லியில் நிலவும் அசாதரணச் சூழலின் நிலைமை குறித்து நள்ளிரவில் கூட்டம் கூட்டி ஆய்வு செய்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


பிரச்சினை முடிவுக்கு வருவதாகத் தெரியாத சூழலில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலைமை இன்று கட்டுக்குள் வந்துவிடும் என்று நம்பிய இடத்தில் மீண்டும் இன்று காலை கல்வீச்சு நடைபெற்றது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Delhi Riots: வடகிழக்கு டெல்லியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த செய்தி