ஆப்நகரம்

முன்னாள் அமைச்சர் மீது மாணவர் சங்கத்தினர் தாக்குதல் முயற்சி!

ஆந்திர முன்னாள் அமைச்சர் நாராயணா தன்னுடைய குடும்பத்திற்கு சொந்தமான நாராயணா கல்வி நிறுவனங்களை பார்வையிட வந்தபோது மாணவர் சங்கத்தினர் அவரை தாக்க முயற்சித்தனர்.

Samayam Tamil 4 Dec 2019, 5:45 pm
நாராயணா கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமல்லாது தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
Samayam Tamil முன்னாள் அமைச்சர் மீது மாணவர் சங்கத்தினர் தாக்குதல் முயற்சி


நூற்றுக்கணக்கான நாராயணா கல்வி நிலையங்களின் உரிமையாளரான நாராயணா தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரான இவர் அனந்தபூரில் இருக்கும் நாராயணா கல்வி நிலையங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தார்.

அட நம்புங்க சார், ஒரு கிலோ முருங்கை 600 ரூ. மட்டும்தான்..வெங்காயம் எவ்வளவுன்னு நீங்களே பாருங்க!

நாராயணா வந்திருப்பது பற்றிய தகவல் அறிந்த மாணவர் சங்க பிரதிநிதிகள் அனந்தபூரில் இருக்கும் நாராயணா ஜூனியர் கல்லூரிக்கு வந்து அவருடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நாராயணா கல்வி நிலையங்களில் அரசு நிர்ணயம் செய்திருப்பதைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் மாணவ மாணவிகளை துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டினர்.

சபரி மலைக்கு மாலைபோட்ட மாணவன் பள்ளிக்குள் நுழையத் தடை: பக்தர்கள் போராட்டம்!

மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஏதோ ஒரு மறைமுக திட்டத்துடன் வந்திருப்பதை உணர்ந்து கொண்ட நாராயணா அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றார். அப்போது அவருடைய சட்டையை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்திய மாணவர் சங்கத்தினர் அவரை தள்ளி விட முயன்றனர். ஆனால் அங்கிருந்த நாராயணா கல்வி நிலைய ஊழியர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Chennai Rains: தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை - 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ஏராளமான கல்வி நிலையங்களின் உரிமையாளரான முன்னாள் அமைச்சரை மாணவர் சங்கப் பிரதிநிதிகள் தாக்க முயன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயணாவை தாக்க முயன்ற மாணவர் சங்க பிரதிநிதிகளை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி