ஆப்நகரம்

தூத்துக்குடி மாணவர்களிடம் பேசிய மோடி!

தான் தூத்துக்குடி வருவதாக பிரதமர் மோடி மாணவிகளிடம் உறுதியளித்துள்ளார்.

Samayam Tamil 6 Jun 2018, 5:11 pm
தான் தூத்துக்குடி வருவதாக பிரதமர் மோடி மாணவிகளிடம் உறுதியளித்துள்ளார்.
Samayam Tamil modi smile


பிரதமர் மோடி இன்று ஸ்டார்ட் அப் திட்டத்தால் பயனடைந்த தொழிலதிபர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், சிறுகுறு கிராமங்களில் மட்டுமில்லாது, நகர்புறங்களிலும் ஸ்டார்ட் அப் திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுவதாக கூறினார். மேலும், புதிதாக தொழில் துவங்க இளைஞர்கள் பலர் ஆர்வாமாக இருப்பதாகவும் ஆனால், பொருளாதார ரீதியில் பணமில்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்தார். எனவே, அவர்கள் பயன்பெறும் வகையில், புதிதாக நிதிக்கு நிதி என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


தெடர்ந்து மாணவ மாணவிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். அப்போது தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் தயாரித்த சோலார் பேனல் பொருத்தப்பட்ட நீர் பாசன இயந்திரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்த மாணவிகள், இத்தகைய இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும், அதற்காக நீங்கள் தூத்துக்குடிக்கு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

மாணவிகளின் வேண்கோளை ஏற்ற பிரதமர் மோடி, தான் கண்டிப்பாக தூத்துக்குடி வருவதாக உறுதியளித்தார். இறுதியில், வணக்கம் என்று தமிழில் பேசி விடைபெற்றார்.

அடுத்த செய்தி