ஆப்நகரம்

முன்னாள் எம்.பி தருண் விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு..!

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்திற்கு வருகை புரிந்த முன்னாள் பாஜக எம்.பி தருண் விஜய்க்கு, மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

TNN 20 Apr 2017, 5:32 pm
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்திற்கு வருகை புரிந்த முன்னாள் பாஜக எம்.பி தருண் விஜய்க்கு, மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil students protest against ex bjp mp tarun vijay in puducherry central university
முன்னாள் எம்.பி தருண் விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு..!


புதுச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைகழகத்தில் நடைபெற இருந்த விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் பாஜக எம்.பி தருண் விஜய் இன்று வருகை புரிந்தார். இந்நிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென விழா நடைபெறும் அரங்கத்தின் பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்களில் சிலர் , தென்னிந்தியர்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் விழா நடைபெறுவதில் இடையூறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழா அரங்கிற்குள் நுழைந்த காவல்துறையினர், மாணவ,மாணவிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். இதில் சில மாணவிகளின் உடைகள் கிழிந்தன.
பின்னர் கடும் பாதுகாப்புடன், தருண் விஜய் எம்.பி அனுப்பி வைக்கப்பட்டார்.

சில வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய தருண் விஜய், “நிற வெறி கொண்டவர்கள் இந்தியர்கள் என கருதுவது தவறு. எங்களுக்கு நிறவெறி இருந்தால், எப்படி கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சுமூகமாக வாழ முடியும்?” என கருத்து தெரிவித்திருந்தார். தருண் விஜயின் இந்த கருத்துக்கு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Students protest against Ex BJP MP Tarun Vijay in Puducherry central university

அடுத்த செய்தி