ஆப்நகரம்

சோனியா காந்தி படிப்பு சர்ச்சை: சபாநாயகருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் படிப்பு தொடர்பான தகவல்கள் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்

Samayam Tamil 28 Sep 2020, 5:57 pm
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விவகரங்களில் அவரை தொடர்ந்து சீண்டி வருபவர் சுப்ரமணியன் சுவாமி. சோனியா இந்திய நாட்டை சேர்ந்தவர் அல்ல என்று கூறிவருவதுடன், சோனியா தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி.
Samayam Tamil சுப்ரமணியன் சுவாமி
சுப்ரமணியன் சுவாமி


அந்த வகையில், தற்போது சோஒனியாவின் படிப்பு தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மக்களவை தரவுகளில் பதிவிடப்பட்டுள்ள சோனியா காந்தி தொடர்பான விவரங்களில் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படித்ததாக உள்ளது. ஆனால், இது உண்மை அல்ல. தவறான தகவலை சோனியா அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனோகர் ஜோஷி சபாநாயகராக இருந்த போது இதே புகாரை தான் அளித்ததாகவும், அதற்கு பதிலளித்த சோனியா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படித்ததாக தவறுதலாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த தவறு நடக்காது எனவும் தெரிவித்திருந்தார் எனவும் சுப்ரமணியன் சுவாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் வலியுறுத்தல்!

சுப்ரமணியன் சுவாமி கடிதம்


சுப்ரமணியன் சுவாமி கடிதம்


சோனியா தகவல்


அதேபோல், அதற்கு அடுத்து நடைபெற்ற மக்களவை தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களில் சோனியா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படித்ததாக அவர் பிரமாணப் பத்திரம் எதுவும் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, தற்போது இடம்பெற்றுள்ள தகவல்கள் தொடர்பாக தனது முந்தைய புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி