ஆப்நகரம்

அயோத்தி வழக்கு தீர்ப்பு: மோடிக்கு சுப்பிரமணியன் சாமி வைத்த கோரிக்கை!

அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Nov 2019, 12:52 pm
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
Samayam Tamil அயோத்தி வழக்கு தீர்ப்பு


அதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக் கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் நிலம் தர மத்திய அரசுக்கும் உத்தரப்பிரதேச அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Babri Masjid Land: அயோத்தியில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்ப்பு!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்து அமைப்புகள் நீண்டகாலமாக வைத்துவரும் கோரிக்கை. இந்த கருத்தை ஆரம்பம் முதலே விதைத்தவர் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால். ராமஜென்ம பூமி இயக்கம் தொடங்கப்படுவதற்கு மூலகாரணியாக இருந்தவர் அசோக் சிங்கால்.

அயோத்தி வழக்கு தீர்ப்பு: தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

1989ஆம் ஆண்டே பாபர் மசூதிக்குள் சென்று ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர் அசோக் சிங்கால். அத்வானிக்கு முன்பாகவே இந்த முயற்சியில் ஈடுபட்ட அசோக் சிங்காலை தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் சுப்பிரமணியன் சாமி நினைவு கூர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்த வெற்றித் தருணத்தில் அசோக் சிங்காலை நினைவு கூர்வோம். நமோ அரசு உடனடியாக அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

அயோத்தி வழக்கு: அமித் ஷா வீட்டில் முக்கிய ஆலோசணை!

அதே சமயம் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு நரேந்திர மோடி தீர்ப்பை யாருக்கும் வெற்றி, தோல்வியாக கருதக் கூடாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி