ஆப்நகரம்

தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளா் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா சிறையில் தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 4 Sep 2017, 2:38 am
அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா சிறையில் தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil suicide by hanging in support of the dara satcha jail
தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளா் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை


அரியானா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் குர்மீத் ராம்ரகீம் சிங். இவரது ஆசிரமத்தில் இருந்த பெண்கள் கொடுத்த கற்பழிப்பு புகாரில் ராம்ரகீம் சிங் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் அவரை குற்றவாளி என அரியானா நீதிமன்றம் அறிவித்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது. இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 35க்கும் அதிகமானோர் பலியாகினர். 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், அம்பாலாவில் உள்ள மத்திய சிறையில் இருந்த ரவீந்தர் என்பவர் நேற்று காலை கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் படுக்கையில் அவரை காணாத சக கைதி, அவரை சிறையின் பல இடங்களில் தேடியுள்ளார். இறுதியாக கழிவறைக்கு சென்றுபார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ந்தார். உடனே இதுகுறித்து சிறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் அங்கு விரைந்து சென்று ரவீந்தர் உடலை கைப்பற்றினர். அதன்பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் உத்தரப்பிரதேச மாநிலம் சரஸ்வா பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரது உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி