ஆப்நகரம்

நிதியமைச்சருக்கு எதிராக வழக்கு போட்டவருக்கு ஐம்பதாயிரம் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அபராதத் தொகையை செலுத்தும் வரையில் வழக்கறிஞர் தொடுக்கும் எந்த மனுவும் ஏற்கப்படாது என்றும் உத்தரவு

Samayam Tamil 7 Dec 2018, 6:38 pm
மத்திய நிதியமைச்சருக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil arun-jaitley


மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் கம்பெனிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ததாக எம்.எல் ஷர்மா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷர்மா தொடுத்த மனுவில் எந்தவிதமான ஆதாரமும் இல்லாதால், நீதிபதிகள் கோபமடைந்தனர். பின்னர், இதில் என்ன பொதுநலம் இருக்கிறது என்று தெரியவில்லை என கூறி பொதுநலம் என்றால் என்ன தெரியுமா என்று கேட்டு விளக்கமளித்தனர்.

இதையடுத்து தேவையில்லாமல் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக வழக்கறிஞர் ஷர்மாவை கண்டித்து 50,000 ரூபாய் அபாரதம் விதித்து உத்தரவிட்டனர். மேலும், அபராதத் தொகையை செலுத்தும் வரையில் அவருடைய எந்த மனுவும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி