ஆப்நகரம்

INX Media Case: சிதம்பரத்தை நாளை காலை வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை நாளை காலை வரை கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத்துரைக்கு உச்ச நீதிமன்றம் தடை நீட்டிப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 28 Aug 2019, 4:32 pm
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது இன்று விவாதம் நடந்தது.
Samayam Tamil chidambaram 2


விசாரணையின்போது, ''சிதம்பரம் அறிவாளி, சாதுர்யம் மிக்கவர். சிதம்பரத்தை கைது செய்தது அனைத்தும் சட்டப்படியே நடந்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை நாம் கோரி வருகிறோம். அவ்வாறு கிடைக்கும் பணத்தை பயன்படுத்துவதும் குற்றமே'' என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்ஜி மேத்தா வாதிட்டார்.

மேலும் மேத்தா தனது வாக்குவாதத்தில், ''சட்டவிரோத பண பறிமாற்றம் செய்ததற்கான ஆதாரம் தேதியுடன் இருக்கிறது. நீதிமன்றம் கோரினால் அதை தாக்கல் செய்ய தயாராகவே இருக்கிறோம். சிதம்பரத்தை கைது செய்வதற்கான அனைத்து உரிமையும் உள்ளது. சட்டரீதியாக இருக்கும் உரிமையை குறைக்க உச்ச நீதிமன்றத்தால் முடியாது.

சிதம்பரம் அறிவாளி, சாதுர்யமானவர்: அமலாக்கத்துறை விவாதம்!!

சிதம்பரத்துக்கு வெளிநாட்டில் சொத்து இருப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. வெளிநாட்டில் அவருக்கு இருக்கும் பினாமி சொத்துக்கள் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளது. வெளிநாட்டு நீதிமன்றங்களிடம் இருந்து letters rogatory என்ற முறையில் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது எங்களது சட்ட உரிமைகளில் தலையிடுவதாக அமையும்'' என்றார்.

அமலாக்கத்துறை விசாரணையை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும்: சிதம்பரம் கோரிக்கை!!

அமலாக்கத்துறை வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்றும் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஜாமீன் கோரி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். கைது செய்வதில் இருந்து இன்று வரை விலக்கு அளிக்கப்பட்டு இருந்த நிலையில், மேலும் நாளை காலை வரை கைது செய்யக் கூடாது என்று தடை நீட்டிப்பு உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி