ஆப்நகரம்

106 நாட்களுக்கு பின் வெளியே வருகிறார் ப.சிதம்பரம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 4 Dec 2019, 3:58 pm
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெற்று தரப்பட்டது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
Samayam Tamil P.Chidambaram


இந்த விவகாரத்தில் அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

காங்கிரசுக்கு தேர்தல் நிதியாக ஹவாலா பணம்... விளக்கம் கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ்

சிபிஐ வழக்கில் ஜாமீன்:

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர்.

ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததால் ப.சிதம்பரத்தால் வெளியே வர முடியவில்லை. இவரது உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி ஜாமீன் கோரப்பட்டது. ஆனாலும் ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து வந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை ப.சிதம்பரம் நாடினார். அங்கு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை, சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால் என்ன தவறு என்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னாள் அமைச்சர் மீது மாணவர் சங்கத்தினர் தாக்குதல் முயற்சி!

நிபந்தனை ஜாமீன்:

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வர உள்ளார்.

சிதம்பரம் நிபந்தனை ஜாமீன்


ப.சிதம்பரம் பேட்டி தரவோ, அறிக்கை விடவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது. பாஸ்போர்ட்டை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. வெளிநாடு செல்லக் கூடாது.

விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பிணைத் தொகையாக ரூ.2 லட்சம் பணம் செலுத்த வேண்டும். இதே தொகையுடன் இருவரின் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரி மலைக்கு மாலைபோட்ட மாணவன் பள்ளிக்குள் நுழையத் தடை: பக்தர்கள் போராட்டம்!

அடுத்த செய்தி