ஆப்நகரம்

டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை- உச்சநீதிமன்றம்

முதலமைச்சர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை

Samayam Tamil 29 Oct 2018, 12:29 pm
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil supreme1_1530546601


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, தடை விதிக்கப்பட்டது.

அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நெடுஞ்சாலை ஒப்பந்த ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை, இது தொடர்பாக அனைத்து செயல்பாடுகளில் வெளிபாட்டுதன்மை பின்பற்றப்பட்டுள்ளது. ஒப்பந்த ஒதுக்கீடு குறித்து அனைவருக்கும் விளக்கம் அளிக்க தயார் என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய திமுக தரப்பு வழக்கறிஞர், இந்த ஒப்பந்த ஒதுக்கீட்டில் நிறைய முறைகேடுகள் உள்ளன . டெண்டர் விவகாரங்களில் சம்மந்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளிடமும் இதுகுறித்து விசாரணை செய்யவேண்டும் என்று விவதாங்களை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, ஒப்பந்த முறைகேடு என்றால், டெண்டர் தொடர்பான விவரங்களை வைத்து தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் எதன் அடிப்படையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த வழக்கு எதன் அடிப்படையில் தொடரப்பட்டது என்று விளக்கம் கேட்டு திமுகவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த செய்தி